தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை – இது மக்களின் இயக்கம்! நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம், இதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற மக்கள் நல இயக்கத்தை கடந்த மார்ச் மாதமே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இந்த இயக்கத்தில் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அழைப்பு மற்றும் அதற்கான அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அடங்கிய புதிய வீடியோ அறிவிப்பை மட்டுமே அவர் இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





