தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.
மேலும், அவர் எம்.எஸ்.பாஸ்கர் நடிகர் விஜயுடன் தமிழன், அழகிய தமிழ் மகன், திருப்பாச்சி, சிவகாசி, காவலன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளார். இதனால் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் விஜயுடன் பேசிய ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்களை விகடனுக்கு அளித்த பேட்டியில் எம்.எஸ்.பாஸ்கர் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் பேசிய போது,”விஜய் சார் இப்பவும் பழசை மறக்காமல் என்னை பார்த்தவுடன் கட்டிபிடிச்சுக்கிட்டார். அவர் CM அவருக்கே அதிக வேலை இருக்கும் என எண்ணி அவரோடு அதிக நேரம் எடுத்துக்க வேண்டாம் ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு திரும்பிடலாம்னு நினைச்சுத்தான் போனேன். ஆனால், 20 நிமிஷம் பேசிக்கிட்டே இருந்துட்டோம்.
மேலும், அவர் உங்கள் படமான ‘பார்க்கிங்’ பார்த்தேன். அதை பார்த்தவுடன் உங்க மேல ரொம்ப கோபம் வந்துடுச்சு’னு சொல்லி ரொம்பவே பாராட்டினார். அதன்பின், தேசிய விருது வாங்கினதுக்கும் அவரது பாராட்டுக்களை எனக்கு தெரிவித்தார். எங்க வீட்டில் எல்லோருமே உங்களோட ரசிகர்கள்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிட்டு இருக்கும் போது TVK முன்னிலை செய்தி என வந்தே போதே வரும் என் மனைவி அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்கு இனிப்பு வழங்கிட்டு இருந்தாங்க. அவங்களோட ஒரு வார்த்தை நீங்க பேசினால், பெரிய வெகுமதி கிடைச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன். ‘உடனே பேசுறேன்’னு சொல்லி அவர் என் குடும்பத்துடன் பேசினது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது”, என கூறியிருந்தார்.





