‘ஆயிரத்தில் ஒருவன்-2’ வேண்டாம், செல்வராகவன் வேண்டாம் – நடிகை ஆண்ட்ரியா!

கடந்த 2010-ல் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் இயக்கி கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து திரைக்கு வந்த படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’. ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்திரன் தயாரித்த இந்த படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார்.  தமிழ் சினிமாவின் இது வரை செய்திடாத ஒரு வித்தியாசமான முயற்சி இந்த திரைப்படமாகும்.

கற்பனை கலந்த பல ஸ்வாரஸ்யமான திகிலூட்டும் காட்சிகள் அமைந்த திரைக்கதையும், அதற்கு ஏற்ற நடிகர்களின் எதார்த்த நடிப்பும், இந்த இரண்டையும் பிண்ணி பிணைக்கும் ஜி.வி.பிரகாஷின் இசையும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ம் ஆண்டு இப்படம் வெளியான போது வரவேற்க தவறியத் தமிழ் சினிமா ரசிகர்கள், கடந்த 2019 மற்றும் 2021-ல் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது அதே ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.

அதன்பிறகு இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் எங்கு சென்றாலும் இதற்கான இரண்டாம் பக்கம் எப்போது வரும் என்ற கேள்வி கேட்க படாமல் இருக்கமாட்டார்கள். அப்படி அந்த சமயம் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் செல்வராகவன் கூறுகையில், ‘இதற்கான 2ம் பாகம் உருவாக்கப்படுவது எனது கையில் மட்டுமில்லை, அனைவரும் இணைய வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதற்கு முக்கிய காரணம் நடிகர் கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன்-2 சாத்தியமில்லை என்பது தான்.

கார்த்தி மட்டுமின்றி ரீமாசென், குறிப்பாக நடிகை ஆண்ட்ரியா இல்லாமல் இதனது இராண்டாம் பாகம் எடுக்க முடியாது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகின. மேலும், சமீபத்தில் கூட செல்வராகவன் இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை முழுவதுமாக முடித்து விட்டேன் என அவரது சமூக தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனால், இப்படத்திற்கு ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு கூடியது. இந்த நிலையில் முதல் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா இந்த 2-ம் பாகத்தில் நடிக்க மாட்டேன் தற்போது கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் என கூறியிருக்கிறார். அவர் ஒரு நேர்காணலில் பேசியபோது, “ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த அனுபவங்களை எப்போதுமே மறக்க முடியாது.

சுமார் 200 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் அனைவரும் அதிகமாக கஷ்டப்பட்டோம். இப்படத்துக்கு பிறகு எந்த படத்தில் நான் நடித்தாலும் சுலபமாகவே இருந்தது. அதுவே செல்வராகவனுடன் பணியாற்றுவது மிகவும் கடினம். அதனால், ஆயிரத்தில் ஒருவன் 2வது பாகத்தில் நான் நடிக்க மாட்டேன்”, என கூறியிருந்தார்.

Related Posts

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை…

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 3 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 5 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!