“படம் பார்த்தால் புரியும்” சர்ச்சைக்கு முற்றிப் புள்ளி வைத்த நட்டி !!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி ‘நடராஜன்’ நடித்த ‘TN 2026 – தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாமபதி ராமையா இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல்-10 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது முதல், இப்படம் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்த படம் என இணையத்தில் பேசப்பட்டு வந்தது. அதுவும் அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை கலாய்க்கும் விதமாக இப்படம் உருவாகி இருக்கிறது என நெட்டிசன்களால் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இப்படம் தவறாக விஜயை குறித்து சித்தரிக்கபட்டுள்ளதா என இணையத்தில் இயக்குனர் உமாபதியிடமம், நட்டியிடமம் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று இப்படகுழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.  குறிப்பாக நடிகர் நடராஜன் இதற்கு வெளிப்படையாகவே பதிலளித்துள்ளார்.

இது குறித்து பேசிய நட்டி, “உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி.  இந்தப் படத்தின் டீசரை பார்த்து விட்டு நான் ஒருவர் மீது அவதூறு ஏற்படுத்துமாறு நடித்துள்ளேன் என கூறிவருகின்றனர். உண்மையாகவே நான் அப்படி செய்யவில்லை.

இந்த திரைப்படத்தின் நோக்கம் முழுவதுமே படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை அனைவரும் சிரிக்க வேண்டும் என்பது தான். விஜய் சார் போல தோற்றம் வரும் இடங்கள் படத்தின் ஒரு சின்ன பகுதி தான். அதைத் தாண்டி படத்தில் இன்னும் நிறைய ஸ்வாரஸ்யமான கெட்டப்பில் நான் நடித்துள்ளேன்.

மேலும், விஜய் சார் ஒரு சிங்கம். அந்த சிங்கத்தை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவரை அப்படி டீஃபேம் செய்யக்கூடிய எண்ணம் எனக்கும், எங்களுடைய படக்குழுவுக்கும் கிடையாது. இந்த படம் பார்த்தால், நாங்கள் செய்திருக்கிற விஷயம் என்னவென்று உங்களுக்கு புரியும்.” என கூறியிருந்தார்.

Related Posts

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை…

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 3 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 5 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!