நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சமீபத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கருப்பு. இந்த படம் கடந்த மே-15 ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவிற்கும் இதற்கு முன்பாக 2013-ம் ஆண்டு வெளியான சிங்கம்-2 திரைப்படமே அவருக்கு தியேட்டரில் பெரும் வெற்றியை பெற்று தந்தது. அதன் பிறகு தியேட்டரில் வெளியான எந்த ஒரு படமும் அவருக்கு சரிவர போகவில்லை. கடைசியாக இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளியான இந்த சிங்கம்-2 படம் தான் உலக அளவில் அவருக்கு 120 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற சிறப்பான திரைப்படங்கள் ott-யில் வெளியானதால் தியேட்டரில் வெற்றி அவருக்கு கிடைக்காமலேயே இருந்தது. இந்த நிலையில் கருப்பு திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.
சூர்யாவின் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் இப்படியான வசூல் சாதனை புரிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு திரைப்படம் வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.
அதன் பின் அடுத்த 3 நாட்களில் உலக அளவில் 207 கோடி ரூபாய் இப்படம் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர்களின் மூலம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த படம் 300 கோடியை எட்டி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. மேலும், விரைவில் 300 கோடி அறிவிப்புடன் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து புதிய போஸ்டர் வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





