தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் தனது தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். இருப்பினும் முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பனி) திரைப்படம் பாஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 3 திரைப்படங்கள் (லவ் டுடே, டிராகன், டூட்) மூலம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட முக்கிய நடிகராக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த இவருக்கு தற்போது முதல் முறையாக LIK படம் மூலம் தனது சினிமா கரியரின் முதல் சறுக்கலையும் சந்தித்துள்ளார்.
தற்போது, இதற்கு அடுத்தபடியாக லவ் டுடே திரைப்படத்தைத் தொடர்ந்து ஏ.ஜி.எஸ் (AGS) நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியும், அதனை அவரே நடித்தும் வருகிறார். தனது கடைசி திரைப்படமான LIK பிளாப் ஆன நிலையில் இந்த படத்தை மிகவும் கவனத்துடன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் என புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஒரு புறம் படத்தை இயக்கியும் நடித்தும் வரும் அவர் மறுபக்கம் சைலன்ட்டாக ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக ஒரு படத்தையும் தயாரிக்க தொடங்கியிருக்கிறாராம்.
மேலும், அந்த படத்தில் தனது முந்தய படத்தின் அவருக்கு ஹீரோயினாக நடித்த மமிதா பைஜு தான் அவர் தயாரிக்கும் இந்த படத்தில் முன்னணி ஹீரோயினாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதனை குறித்து எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.






