என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் தற்போது அவருக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதில், வெளியில் தெரியும் அளவிற்கு எந்த ஒரு படமும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் ஹீரோ, இரும்புத்திரை, லியோ போன்ற படங்களின் முக்கிய கதாபாத்திரம் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி வருகிறார்.

இப்படி இருக்கையில் மறுபுறம் ஒரு சில யூடியூப் சேனல்களுக்கும் அவர் நேர்காணல் கொடுத்து வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் அவர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பேசிய அவர் தனது ஐயர் பெயர் அர்ஜுன் இல்லை எனவும், தனக்கு இந்த பெயர் எப்படி என்பதை பற்றியும் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசிய போது,“எனது உண்மையான பெயர் அர்ஜுன் இல்லை. எனது உண்மையான பெயர் ஶ்ரீனிவாஸ். மேலும், ஶ்ரீனிவாஸ் எனது பெயராக இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எனது பெயர் அசோக் தான். எனது நண்பர்களும் என்னை அப்படி தான் கூப்பிடுவார்கள்.

நான் சினிமாவிற்கு வந்த பிறகு, நான் நடித்த எனது முதல் படத்தின் கதாப்பாத்திரத்தின் பெயர் தான் அர்ஜுன். அப்படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த பெயர் நன்றாக உள்ளது, நீ இந்த பெயரை உன் இயற்பெயராக மாற்றிக்கொள் என்றார். நானும் அப்படியே செய்தேன், அந்த சமயத்தில் என்னை யாராவது அர்ஜுன் என்று பெயர் சொல்லி கூப்பிட்டால் நான் திரும்பக் கூட மாட்டேன்.

ஆனால், அதற்கு பிறகு தான், என்னால் அதை மாற்ற முயன்றது“, என கூறியிருந்தார். ‘சிம்ஹட மாறி சைன்யா’ எனும் கன்னட மொழித் திரைப்படமே ஒரு நடிகராக அர்ஜுனின் முதல் படமாகும். மேலும், இப்படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் அர்ஜுன் என்பதும் இப்படத்தின் இயக்குநர் ‘ராஜேந்திர சிங் பாபு’ என்பதும், இவர் கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை…

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 4 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 5 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!