ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரிஷ்யம் 3? திரை விமர்சனம் இதோ!!

திரிஷ்யம் 3 : மலையாளத் திரையுலகைத் தாண்டி தமிழ், கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் தான் திரிஷ்யம். இதன் முதல் இரண்டு பாகங்கள் கொடுத்த வெற்றியே திரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாவதற்கு  ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

இப்படம் வெளியாவதற்கு முன்பு, இப்படத்தின் இயக்குநரான ஜீத்து ஜோசப் அளித்த பேட்டி ஒன்றில், ” இப்படம் கடந்த திரிஷ்யம் 1 மற்றும் திரிஷ்யம் 2 படத்தை போல் மிகப்பெரிய ட்விஸ்ட் மற்றும் திரில்லிங்கான திரைக்கதை கொண்ட படமாக இருக்காது” என குறிப்பிட்டு கூறியிருந்தார்.

கதைக்களம்

படத்தின் தொடக்கத்தில் கதையின் நாயகனான மோகன்லால் தன் வாழ்க்கையில் நடந்ததையே திரிஷியம் என்ற பெயரிலேயே, ஒரு கதையாக எழுதி படமாக எடுக்கிறார். மேலும், மனோதத்துவ மருத்துவரிடம் ஆலோசனையின் படி தனது மூத்த மகளும் முழுமையாக தனது கடந்த காலத்தை விட்டு வெளியவும் வருகிறார். இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் தனது மனதை பாதிக்கவும் செய்கிறது.

அதே நேரத்தில் ஊரே ஜார்ஜ் குட்டியின் இந்த கேஸை மறக்க, இனி நம் குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என ஜார்ஜ் குட்டி இருக்கிறார். தன் மகளுக்கு பொருத்தமான கணவனை பார்க்க ஆரம்பிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க தன் மகளுக்கு வருகிற எல்லா சம்மந்தத்தையும் யாரோ இரண்டு பேர் அந்த பெண்ணுக்கு மன ரீதியாக பிரச்சனை இருக்கிறது என சொல்லி திருமணத்தை தடை செய்ய வைக்கிறனர்.

அது யார் ? அவர்களுக்கு என்ன வேண்டும் ? ஜார்ஜ் குட்டி இதை கண்டறிந்தாரா? இதற்கு பின் அந்த பழைய கேஸ் இவர்களின் வாழ்க்கையை பாதித்ததா? என்பதை சிறிது திரில்லரும், பல எமோஷனல் காட்சிகள் மூலமும் கூறும் திரைக்கதையை இந்த திரிஷ்யம் 3. முதல் பாதியில் கதையை மெதுவாக நகர்த்தி இடைவேளை காட்சிகளில் நம்மை சீட்டின் நுனிக்கு தள்ளும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றே கூறலாம்.

அதனை தொடர்ந்து அமைந்த இரண்டாம் பாதியிலும் மெதுவாக கதையை நகர்த்தியது படத்தின் பிளஸ் என்றாலும் அதுவே இப்படத்தின் ஒரு சிறிய நெகடிவ்வாகவும் அமைந்துள்ளது. இருப்பினும், படத்தின் இரண்டாம் பாதியில் இடம் பெரும் எமோஷனல் காட்சிகளில் ஜார்ஜ் குட்டி ஒற்றை ஆளாக தனது நடிப்பில் தாங்கி பிடிக்கும் காட்சிகள் அந்த கதாப்பாத்திரத்திற்கு இயக்குநரின் எழுத்து வலு சேர்த்து உள்ளது என்றே கூறலாம்.

ஜார்ஜ் குட்டியை தொடர்ந்து படத்தில் இடம் பெற்ற மற்ற கதாபாத்திரங்களும் இப்படத்திற்கு பெரிய பக்க பலமாகவே அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த திரிஷியம் 3, முதல் 2 பாகத்தில் இருந்த பதட்டமும் பரபரப்பும் இதில் இல்லை என்றாலும் ஜார்ஜ் குட்டி மற்றும் ஐஜி என இரண்டு குடும்பத்தின் மன வேதனை சரியாக ரசிகர்களிடம் கடத்தி இருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த படத்தின் 4ஆம் பாகம் வருமா என்ற கேள்வி இப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Related Posts

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

மலையாளத் திரையுலகின் இரு பெரும் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து பணியாற்றிய படம் தான் ‘பேட்ரியாட்’ (Patriot). இந்த படம் திரையரங்குளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், பெரும்பாலுமான ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 3 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 5 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 5 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!